ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 67
weblink
பாடல்: 67
துவைதமென்றும்; துவைதமொடு அத்வைதமென்றும்;
தூயபர மாத்துவைத
மதமீதென்றும்;
இவ்விதமென்றும்; அவ்விதமென்றும்;
இலதுண்டென்றும்;
இவை முதலாம், ஆங்காங்கே இயம்பலுற்ற;
விவிதமத இவைவுரை
செய்வாதம் யாவும்;
விசாரிக்கின் விமலபரப்
பிரம்மம்தானாம்!
குவிதலுறாப் பரப்பிரம்மம்
அதுநாம் என்று;
கோதறவே பாவித்து
குறைவு தீர்வாய்!
கருத்து:
லௌகீகமென்றும், தெய்வீகமென்றும்
பரமார்த்தீகமென்றும், துவைதமென்றும் விஷிஸ்டாத்வைதமென்றும், அத்வைதமென்றும், இப்படியென்றும். அப்படியென்றும், இல்லையென்றும் உண்டென்றும், இப்படி இன்னமும் தர்க்க, குதர்க்கம் செய்யும், வாதப் பிரதிவாதங்கள், ஒன்றுமே இல்லை! இவை அனைத்தும், இன, ஜன, மன துவேஷங்களாகும்.
இவைகளின் உள்ளே புகுந்து விடாமல், அனைத்தும் அந்த ஒன்றே! அது நாமே! நாமே அது! என எந்த குறைவும், சிக்கலும் இன்றி சும்மா இரு!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 67