ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 66

weblink


பாடல்: 66

இருக்கின்ற(து) இலங்குகின்ற(து)
இன்பமென்றும்;
இயம்பியிடும் நாமமொடு
ரூபமென்றும்;
தருக்கமிடும் இவ்வம்ச
பஞ்சகத்தில்;
தயங்கியிடும் முன் மூன்றம்சம்
பரத்தின் ரூபம்!
சுருக்கமுறும் இரண்டம்சம்
ஜகத்தின் ரூபம்!
சொற்பொருளாம் இவ்வம்சம்
இரண்டும் தள்ளி;
நெருக்கமுறும் ஸத்தியஸித்
சுகமாய் மீந்தும்;
நின்ற பரம் நாம் எனவே
நிச்சயிப்பாய்!

கருத்து:

நாம ரூப ஜகத் ஜீவ வடிவங்களாக மாறி, தோற்றம்! இருப்பு! மாற்றம்! மறைவு! என நான்கு நிலைகளில், அசைகின்றது. அந்த மனம், புத்தி சித்தமென்னும், அசைவினால் நான், எனது என அஹங்கரித்து இனி
இன்ப துன்பமாக சுவைக்கிறதும் அந்த ஒன்றே! அதுவே ஆனந்தம் என்றும் பேசப்படுகிறது.

ஆனந்தம் எனச் சொன்னால்; பேரானந்தமும், பிரம்மானந்தமும்தான், ஆனந்தமே தவிர, உலகியல் ஆனந்தம்
ஆனந்தமில்லை. உலகியல் ஆனந்தமானது, விஷயானந்தம் எனச் சொல்லும் சிற்றின்பம் ஆகும். அது புண்ணிய பாப, ஜனன மரணம் இணைந்த வித்தாகும்.

ஸத் ஸித் ஆனந்தம் எனச் சொல்லும் மூன்றும் பரசொரூப அம்ஸமாகும்!

இந்த ஸத் ஸித் ஆனந்தம் மூன்றும்
எடுத்து விளையாடும் வஸ்துக்கள்;
நாம, ரூப, ஜகத், ஜீவ வடிவங்களாகும்! இந்த நாம ரூபம் இரண்டும் வாக்கிய விளக்கமே. (சொல்லும் பொருளே தவிர
உண்மையில்லை) தவிர உண்மையில் ஒன்றுமில்லை! அந்த ஒன்றே ஸத்தியம். அதுவே நாம்! நாமே அது!

                           எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 66
 

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113