ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 65
weblink
பாடல்: 65
நினக்கயல் போல் தோன்றிய
இந்த நாமரூபம்;
நிகிலமுமே நீயலது
வேறேயன்று!
தமக்கயல்போல் தோன்றிய
இந்த நாமரூபம்;
தாமலது சோதிக்கின்
வேறே உண்டோ!
எமக்கயல் போல் காண்பதெல்லாம் யாமே என்றும்;
யாம் தானே ஏகபரப்
பிரம்ம மென்றும்;
உன் மனக் கவலை யாவையுமே
தீரு மட்டும்;
மறவாமல் எப்போதும்
நிதித்யாசிப்பாய்!
கருத்து:
உன் மனோமய கற்பனையினால், தற்காலிகமாகத் தோற்றியிடும் இந்த நாமரூபஜகம், காலாதீத, அந்த ஒன்றாகிய, அதன் அம்ஸமாகிய உன் சொரூபமே! ஆகவே, எந்த வினாடியும், பரபாவனையாகிய யாமே அது! அதுவே நாம்! என சிந்தித்து சிந்தித்து உன் மனக்கவலையை போக்குவாயாக!
எல்லாம் நீ!