ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 64
weblink
பாடல்: 64
ஆதலினால் தானியத்தை
அடைந்த பின்னர்;
அங்குள்ள பதர்களை
எறிதலே போல்;
பேதமற உணர் பொருளை
உணர்ந்த பின்னர்;
இங்குற்ற நூலையெல்லாம்
எறிதல் வேண்டும்!
வாதகமாம் நூலையெல்லாம்
எறிந்த பின்னர்;
வருந்தியுமே அனவரதம்
இடைவிடாமல்;
போதமுற சாதகமாய்
நிதித்யாசத்தை;
புரியுடனே பூரணமாய்
பழகல் வேண்டும்!
கருந்து:
தானியம் கிடைத்தவுடன் பதர்களாகிய உமியை தூர எறிதல் வேண்டும். என்பது ஸத்தியமே! இங்கு, ஓர் உண்மை மறை பொருளாக இருக்கிறது. அது என்னவென்றால்? வாதகமாம் நூலை எறி, என ஏன் சொல்கிறார் என்றால்? அத்வைதத்தில், பல நூல்களை அறிவு ஊன்றி பார்ப்பாயாக?
உன் மனம், உன் வினைக்கு, தக்கபடி உன் ஸ்ரீ குருதேவர் உணர்த்தும் ஒரு நூல் மட்டும், உன் அறிவுக்கு ஏற்புடையதாக இருக்கும். இருக்க
வேண்டும். மற்ற அனைத்தும் அந்த நூலுக்கு, உபகரணங்களாக
இருக்குமேயன்றி "அதுவாக" இருக்க முடியாது. இருக்கக்கூடாது. அப்படி இருந்தால்தான், இங்கு, "ஒன்றே ஸத்தியம்" என்பது பொருந்தும். ஆகவே, அந்த ஒன்றை மட்டும் ஏற்றுத் கொண்டு, மற்றைய நூல்களை (வாதகமான நூலை) தள்ளு என்றார்.
நாம ரூப ஜகத் ஜீவ குண தோஷங்கள், உன் மனதை விட்டு, அகன்று, அமைதியும், ஸாந்தியும், பெற்று விட்டால், அந்த ஒரு நூலையும், நீ எடுக்க வேண்டாம். ஆகவேதான், ஏழாவது வரியில் போதமுற சாதகமாய், நிதித்யாசத்தை, புரியுடனே பூரணமாய், பழகல் வேண்டும் என்றார்.
அதாவது, இக்கலியுகத்தில் ஆகார தோஷத்தால் பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதால் "அகம் பிரம்ம நிச்சயம்" அவஸ்யம் தேவைப்படுகிறது என உணர்.
குறிப்பு: ஓர் குறிப்பிட்ட காலம் வரை பாராயணம் அவஸ்யம் தேவை.
எல்லாம் நீ!