ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 63
weblink
பாடல்: 63
புரையறவே உணர்பொருளை உணர்ந்த பின்னர்;
பூரணமாம் அப் பொருளின் சாட்க்ஷாதகாரம்;
மருவியிட நிதித்யாசம்
செய்வதல்லால்;
மற்றிறையும் நூல்வழியே
செல்ல ஒண்ணா!
தெரிபொருளை நூல்வழியால்
அறிந்த பின்னர்!
தெரிவித்த நூல் மொழியையே
மீண்டும் சொன்னால்;
உரைதருதன் வாக்குக்கே
துக்க மென்றே;
உபநிஷத வசனமெல்லாம்
உரைக்கு தன்றோ?
கருத்து:
குற்றம், குறை, பேதம் நீக்கினால், அது தாமே பிரகாசிக்கும். அந்த ஒன்றை உணர, அது ஆகிட, சாதனை வேறு எதுவும் தேவையில்லை. மேலே கூறிய
இரண்டையும் நீக்கிவிட்டால் அங்கு உனக்கு விருப்பமும், வெறுப்பும் அவஸ்யம், இல்லாது ஒழிந்து விடும். இந்த நிலையே, நீ தன்னை அறியும் அறிவால் உணர்வதை, நீ உணர்ந்த நிலையாகும்! அப்புறம் படிப்போ, இந்த பாடமோ சாதனையோ செய்தால் அங்கு மனோவிருத்தி உண்டாகி உன்னை துன்பத்தில் ஆழ்த்தும்.
எல்லாம் நீ!