ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 62
weblink
பாடல்: 62
மிகமிகவும் சப்தத்தை
விரும்பி சொன்னால்;
மிகவாக்கின் துக்கத்திற்கு
ஏதுவாகும்!
புகல் பலவாம் சப்தத்தை
பரிந்து கேட்டால்;
பொருந்தும் மனோ
மயக்கத்திற்கு ஏதுவாகும்!
வெகுவிதமாம் அர்த்தத்தை
விசாரம் செய்தால்;
விவித மனோ துக்கத்திற்கு
ஏதுவாகும்!
தருமகனே! ஆதலினால்
அனைத்தும் தள்ளி;
தற்பிரம்மம் தாம் எனவே
நிதித்யாசிப்பாய்!
கருத்துரை:
1. வார்த்தையால், திருத்தி விடலாம் என்று பலநிலைகளில், திரும்ப திரும்ப வாக்கு ஆடினால், உன் வாக்குதான் விரயமாகும். பலனில்லை.
2. பலப்பல அர்த்தங்களோடு வார்த்தைகளை, விரும்பி கேட்டால்
மன மருட்சி உண்டாகும். அங்கு மனம் நிலைக்காது.
3. ஒரு வார்த்தைக்கு, அனேக அர்த்தங்கள் பிரித்து பிரித்து கேட்டால், விரித்து விரித்து உணர்ந்தால், அங்கு
விதவிதமான துக்கம்தான், தோன்றுமேயன்றி அமைதி, ஸாந்தி தோன்றாது!
4. காட்சிகளோ! வார்த்தைகளோ! நீ பேசும் வார்த்கைகளோ அது செயல்படாது. ஆனால் அதன் அம்ஸமான அவன் உனக்காக செயல்படுவான், செயல்பட்டே
ஆக வேண்டும்! "எல்லாம் நீயே" என்றும், "எல்லாம் உனதே" என்றும், அவன் ஆகிய மேனியில், அன்பை வளர்த்தால் உன்னை அவனுள் அடக்கிக் கொள்வான்.
பின், அங்கு உன் தூலகர்மா இயங்கினாலும், அக்கர்மாவின் பாரம் உன் மனதை அழுத்தாது. அது அவன் வேலையாகி விடும்! கர்மாவின் பாரம், மனதை அழுத்தாத தன்மையினால், உன் மனம் "எல்லாம் ஒன்றே! அது நாமே! நாமே அது! என பரிபூரண அனுபவம் பெறமுடியும்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 62