ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 61
weblink
முக்தியுற வேண்டுமென
இச்சை செய்தல்;
மோட்சத்தின் பொருட்டே
தன் உயிர் தரித்தல்;
பக்தீயுடன் நன்றாக
விசாரம் செய்தல்;
பாங்காக பரப்பிரம்ம
ஞானம் எய்தல்;
இத்துவைத ஜகத்தை
யெல்லாம் அறமறத்தல்;
இத்தனையும் பரமார்த்த
தசையில் பொய்யே!
அத்வைத பரப்பிரம்மம்
ஒன்றே உண்மை!
அதுவே நீ! அணுவும் இதில்
ஐயமில்லை!
கருத்து:
முக்தி அடைய வேண்டும் என உறுதி வந்தால், பத முக்தி வேண்டாம்; பர முக்தி வேண்டும். பக்தீ தீவிரமாக பண்ணினாலும், ஸ்ரீ பகவத் சொரூபத்தில் ஒன்றி மயங்கி அவனுடன் நின்று விடாமல், அவனே
நீயாய்! நீயே அவனாய்! இரண்டற கலக்கும் நிலை பெற வேண்டும்!
பின் உன் அனுபவத்தினாலும், குரு கிருபையினாலும், தத்+த்வம்+அஸி=அவனே நாமாய்! நாம் இரண்டும் ஒன்றான அதுவாய் ஆக வேண்டும்! ஆக முடியும்! ஆகி விட்டாய். இது ஸத்தியம்.
இந்நிலை பெறுவதற்கு, மூன்றாவது வாசகப்படி, இத்துவைத, நாம, ரூப, ஜக, ஜீவ தோற்றங்களை நாம ரூபமாக இல்லை, அதுவாகவே இருக்கிறது என்ற அனுபவத்தை வாய் ஞானமாக இல்லாமல், அனுபவ ஞானமாக வேண்டும்.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 61