ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 60
weblink
பாடல்: 60
ஸ்வயமதுவாம் "தத் த்வம் அஸி” என்னும் வாக்கியம்;
சொல்லும் உபதேச
"மஹா வாக்கியமாகும்"!
"அகம் பிரம்மாஸ்மி"
என்னும் வாக்கியம்;
இலகும் "அனுபூதி"
மஹா வாக்கியமாகும்!
மயன்மருவா "பிரக்ஞானம் பிரம்மம்" வாக்கியம்;
‘மனனத்தின்” அப்யாச
வாக்கியமாகும்!
"அயமான்மா பிரம்மம்”
என்றறையும் வாக்கியம்;
"அவைக்கெல்லாம் சம்மதமாம்” வாக்கியமாமே!
கருத்து:
தன்னை அறியும் அறிவாகிய ஆத்ம
ஞான அனுபவத்திற்கு, ஸத்குரு உபதேசமாக "தத் த்வம் அஸி" என்ற மஹாவாக்கியத்தை சிஷ்யன் பெறுகிறான்.
அதை அனுபவம் கொண்டு வரும் நிமித்தம் தியான ஸ்லோகமாக "அகம் பிரம்மாஸ்மி" என அதாவது "அதுவே நாம்! நாமே அது!" என மனனம் பண்ணுகிறான்.
பின் நாம ரூப ஜகத் ஜீவ, ஈஸ்வராதிகளின் பேதம் அகற்றும் வண்ணம் "பிரக்ஞானம் பிரம்மம்" என்பது, அப்யாச வாக்கியமாக அமைகிறது. அதாவது, ஆத்ம பிரக்ஞையோடு இரு, பிரம்மப் பிரக்
ஞையோடு இரு! உடல் உலக குணதோஷ பிரக்ஞையோடு, இராதே! என உணர்த்தப்படுகிறது.
அந்த சிஷ்யனின் சிரத்தையால் பெற்ற ஸ்வய அனுபவத்தினால், அவன் ஜீவன் முக்தன் ஆகி விடுகிறான். அந்த நிலையில் ஸத்திய ஞான சபைக்கு உகந்தவனாகி, அந்த ஸத் சிஷ்யன் குருவிடம் சொல்லும் வாசகம், "அயமான்மா பிரம்மம்"!
எல்லாம் நீ!