ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 59
weblink
பாடல்: 59
பொருந்தி நிதம் செய்கின்ற சிரவணத்தால்;
புகலும் அஸம்பாவனை தான்
முன்பு நீங்கும்!
வருந்தி செய்கின்ற
மனனம் தன்னால்;
வாளாவாம் சம்ஸய
பாவனையும் நீங்கும்!
விரிந்து நிதம் செய்கின்ற நிதித்தியாசத்தால்;
விபரீத பாவனையும்
நீங்கும் போது;
நிரந்தரமாம் பரப்பிரம்ம சாட்க்ஷாத்காரம்;
நிச்சலமாம் தன் மனதில்
நிகழுமன்றே!
கருத்து:
அனைத்தையும் பொருந்தி, பேத பாவனை நீக்கி செய்யும், அகண்டான்ம பாவனையானது, அஸம்பாவிதமான குற்றம், குறைகளை நீக்கும்.
மனம் வருந்தி செய்யும், அகண்டான்ம பாவனையானது, சந்தேக, கலக்க பயத்தை நீக்கும்.
எல்லாம் ஒன்றே! என்றும், அந்த ஒன்றுக்கு, அன்னியம் எதுவுமில்லை என்ற திட உணர்வால்,பரந்து விரிந்து செய்யும் அகண்டான்ம பாவனையானது, விபரீத, வினோத, விசித்திர,பய பீதியை கெடுக்கும்.
இப்படி, மூன்று நிலைகளிலும்
அகண்டபர பாவனயை செய்து, அதுவே நாம்! நாமே அது என ஆகுக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 59