ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 58
weblink
பாடல்: 58
சர்வ மஹாமந்திரமும்
உபதேசிப்போர்;
சாமான்ய குருவெனவே
சாற்றலாகும்.
இருமையில்லா பரப்பிரம்மம்
நீயே யென்று;
இணையற்ற உபதேசம் செய்கின்றோனே;
பெருமைமிகும் ஸத்குருவென்று
உரைக்கலாகும்.
பின் வெகுவாய் பேசுவதால்
பெறும் பேறென்ன?
அரியபரம் நீ என்போன்
ஆசானாவான்!
அகம் பிரம்மம் என அறிவோன் மாணானாவான்!
கருத்து:
உலகில் பத்து கோடி மந்திரம் உண்டு! அவைகளில் தலையாய மந்திரம் "பஞ்சாட்சரம்" ("ஓம் நமசிவாய"), "அஷ்டாட்சரம்" ("ஓம் நமோ நாராயணாய") மற்றும் "பீஜாட்சரம்" (அம்பாளுக்குரியது) இவைகளே!
இவைகள் அனைத்தும், அற்புத சக்திகளையும், அஷ்ட சித்திகளையும், அளவற்ற
ஆற்றல்களையும் உடையதாகும்.
ஆனால், பிறவா நிலையாகிய முக்தியை தர இயலாது, தர கூடாது, தர முடியாது.
ஆகவே, இம்மந்திரங்கள், அனைத்தையும், இம்மந்திரங்களை முறைப்படி கற்று முறைப்படி ஒதும் குருமார்களையும், ஒதுக்கிவைத்து விடு.
அதுவே நீ! நீயே அது! என சந்தேக, கலக்க, பயம் இல்லாமல் தாம் உணர்ந்ததை, உணர்த்தும் ஸத்குருவே "ஸ்ரீஸத்குரு" ஆவார்!
அதை, அப்படியே சந்தேக, கலக்க பயமின்றி ஏற்று அது நாம்! என ஆகும் மாணவனே, ஸத் சீடனாவான்!
எல்லாம் நீ!
