ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 56
weblink
பாடல்: 56
சந்ததம் நாம் பரப்பிரம்ம சொரூபமன்றி;
சற்றேனும் ஸம்ஸாரி
இல்லை யென்று;
இந்தவிதம் அறிவுற்று
ஜலத்தில் சேர்ந்தங்கு;
ஏகரஸமாகின்ற
லவணம் போல;
அந்தமில்லா அகண்ட பரப்பிரம்மத்தின் கண்;
ஐக்கியமே அடைந்த
மனோ விருத்திதானே;
மைந்தா! அகண்டாகார
விருத்தி யென்று;
மாசற்ற ஞானிகளால்
மதிக்கலாகும்!
கருத்து:
அன்றும், இன்றும், என்றென்றும்,யாம் பரப்பிரம்ம சொரூபமேயன்றி, நாம ரூப ஜகத் ஜீவ சம்பந்தம் கொண்ட ஸம்ஸாரி இல்லவேயில்லை என்ற,மெய்யறிவுடன் சமுத்திரத்தில் கரைந்து போன உப்புப் பதுமையென,சர்வசாட்சி
விருத்தியாகிய அகண்டாகார
விருத்தியில் மயமாகி விடுவதே ஓர் சாககனின் லட்சியமாகும்!
ஒர் ஞானிக்கு தூல விருத்தி கூடவே கூடாது. சாட்சி விருத்திக்கு வந்து போகலாம். அகண்டாகார விருத்தியில் எப்போதும் இருக்கலாம்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 56