ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 55

weblink
பாடல்: 55

இல்லையென இயம்பியிடும் பொருளுமின்றி;
இங்குளது என்றியம்பியிடும் பொருளுமின்றி;
சொல்லியிடும் சொற்பொருளோர் அணுவுமின்றி;
சும்மாவே இருந்து
மஹா மௌனியாகி;
அல்லலில்லா அகண்ட
பராநந்தம் மேவி;
அனாதிபவ துக்கங்கள்
அனைத்தும் தீர்ந்து;
கல்வெனவே திடமான
பர ஞானத்தால்;
கற்பனையோ ரணுவுமில்லா
முத்தி சார்வாய்!

கருத்து:

காலாதீத பரவஸ்துவை,
இல்லை என்று சொல்லவும் முடியாது! சொல்லவும் கூடாது!
அதை உண்டு என சொல்லவும் முடியாது! சொல்லவும் கூடாது!

அங்கு சொல்வாரும் இல்லை; செல்வாரும் இல்லை; கொள்வாரும் இல்லை! விளக்க எவருமே இல்லை!

அது தான் தானாய் தனித்து ஸ்வயமாக சுகமாக இருக்கும் ஒன்றாகும்.

இதற்கு ஒரே வழி உண்டு!
அதுவே நாம்! நாமே அது! என கருங்கல்லைப் போல்,
சும்மா இருப்பாயாக!

                           எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 55

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130