ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 54
பாடல்: 54
பதார்த்தமெனச் சொல்லியிடும் உருவம் இல்லை!
விதவிதமாய் விளங்கிய
எப்பொருளும் இல்லை!
விரிந்த ஜக ஜீவ பரம்
எவையும் இல்லை!
சுதந்திரமாய் ஒருகாலும் ஒன்றுமின்றி,
சுத்தமதாய் உளது
பரப்பிரம்மம் ஒன்றே!
நிதம் தவிராது அப்பிரம்மம்
நாமே என்றும்;
நிலைபெற்ற ஞானத்தால் முக்தனாவாய்!
கருத்து:
நாம ரூப ஜகத்தை, விதவிதமான உருவத்தையும், தம் உபயோகத்திற்குத் தகுந்த நாமாவையும் கொடுத்து, "சுவை இன்ப போதையில்" மயங்கி, தேவைகளையும், ஆசைகளையும், பெருக்கிக் கொண்டு, குணதோஷங்களில் முழ்கி விடுவதால், நாம் ஏன் பிறந்தோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
என்ற விபரம் தெரியாமல், "சாலோக, சாம்ப, சாரூப & சாயுச்யம்"
என்னும் லோகாந்த பிராப்திக்கு, ஆசை கொண்டு, மேலே சொன்ன
பதம் பதமாக நாமாக்களை, ஸங்கல்பம் செய்து அதற்கு,
தான தருமம் என்னும் கடும் முயற்சி செய்கிறார்கள். அப்பத முக்திக்காக, வித விதமான பலகார, பட்க்ஷணங்களை செய்து, பதார்த்தமான அவ்வுருவங்களை அமைத்து, தம்முடைய கற்பனையான நாம ரூபத்தில்,
மயங்கி இருக்கிறார்கள்.
இவை அனைத்தும்,மனோமய பிராந்தி மயக்கமே! அதைப்போல், போக போக்கியப் பொருளாகிய, விதவிதமாக விளங்கக் கூடியது எதுவும் இல்லை! மேலே கூறிய, அனைத்திற்கும், ஆதாரமாயும்,
ஆதரவாயும், எந்த கட்டுமில்லாத, சகோரப்பட்சி போன்ற
ஸ்வதந்திரமான, கலாதீதபரமே,
ஸத்தியம். அது நாமே! நாமே அது! என்ற நிலை பெற்ற ஞானத்தால் ஸாந்தியாவாய்!
எல்லாம் நீ!