ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 52
weblink
பாடல்: 52
எப்பொருளும் எங்கேனும் இருக்குமாகில்;
இவ்விதமாய் இது உளது
என இயம்பல் வேண்டும்!
ஸித் பொருளேயன்றி ஒரு பொருளுமென்றும்;
சிறிதுமில்லாத் தன்மையினால் இயம்புதற்கிங்கு;
அற்பவுமே இடமில்லை ஆதலாலே;
அகண்ட பரப்பிரம்ம
வடிவான எம்மில்;
சொற்பொருளோர் அணுவுமில்லை என்றெப்போதும்;
சும்மாவே இருந்து
மிகச் சாந்தனாவாய்!
கருந்து :
நாம ரூப ஜகத் ஜீவ பொருள்கள் எங்கேயாவது இருக்கிறது
எனச் சொன்னால், இது இப்படித்தான்
இருக்கிறது என்றும், இது இங்கேதான்
இருக்கிறது என்றும், இது இன்ன வகைக்குத்தான் பயன்படும் என்றும், பிரமானமாகச் சொல்ல முடிகிறதா என பார்த்தால், அதுதான் இல்லை!
நிமிஷத்திற்கு நிமிஷம், க்ஷணத்திற்கு க்ஷணம் மாறி, மறைந்து நாமரூபம் நமக்கு ஓர் ஏமாற்றத்தையே உண்டு பண்ணுவதாய் அமைகிறது.
மண்ணுக்கு, பாண்டம் எப்படி அன்னியமில்லையோ. மண்ணுக்கு, ஆவரணம் எப்படி அன்னியமில்லையோ.
அதே நிலையில், பரமாகிய சி்த் சொரூபத்திற்கு தோற்ற
மாத்திரமாயுள்ள நாம ரூபம ஜகம் அன்னியமில்லையென உணர்க!
மேலும், ஓர் உண்மை என்னவென்றால். இந்த நாம ரூப ஜகம், தோற்றம்! இருப்பு!
மாற்றம்! மறைவு! ஆகிய இந்த நான்கும், உடையதாக இருப்பதால் இதில் மயங்கி ஏமாறுவது மாயா மனமே ஆகும்.
நாம் அறிவு (ஆன்மா) சொரூபமாக இருப்பதால் அது நாமே! நாமே அது! என சும்மா சுகமாக இருப்பாயாக!
எல்லாம் நீ!