ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 51
Weblink
பாடல்: 51
ஒரு பொருளும் ஒரு காலும் ஜனிக்கவில்லை;
ஒரு காலும் ஜனியாதது
இருப்பதெங்கே?
விரிவுறவே ஜனியாதது
மற்றிராதும்;
வீதலடைந்து விடுமென்னல்
விளம்பலெங்கே?
அரியவனே! ஆதலினால்
அகண்டமான;
அத்வைதப் பிரம்மத்திற்கு அயலேயில்லை!
சர்வமுமே பிரம்மமென்றும்,
அது நாம் என்றும்;
சலியாத பாவனையால்
சாந்தனாவாய்!
கருத்து:
நாம ரூப ஜகமும், அனைத்து பொருள்களும் வந்தன, இருந்தன, என சொல்வதற்கு இடமே இல்லை. காரணம்! அனைத்தும் மண்ணே!(பரமே!) மனோமய பிராந்தி மயக்கத்தினால், அவை வந்தது, இருந்தது, மறைந்தது என சொல்வதனைத்தும் வீண் பிதற்றலே! இப்புலம்பலை குறைத்து, குறைத்து நிறுத்தப் பழகிக் கொண்டால், (இப்புலம்பல் நீண்ட காலமாக இருந்தது போலும்) அனைத்தும் பதுமையாகவும், பின் மண் மயமாகவும் ஆகிவிடும். (உனக்கு மட்டும்) அது நாம்! நாம் அது! என்று சலியாத பாவனையால், கள்ள மனதை வெல்வாயாக!
எல்லாம் நீ!