ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 50
weblink
பாடல்: 50
கால முதல் கற்பனையே இலாமையாலே;
காண்கின்ற காட்சி முதல் இருப்பதெங்கே?
தூல முதல் காத்திரமே
இலாமையாலே;
தொடர்கின்ற பவபந்தம்
இருப்பதெங்கே?
மூலமதாம் அஞ்ஞானம்
இலாமையாலே,
முளைக்கின்ற அதன் செய்கை
இருப்பதெங்கே?
ஆலயமாம் பரப்பிரம்மம்
அனைத்தும் என்றும்;
அதுதானே அகமென்று அனுசந்திப்பாய்!
கருத்து:
காலம் கடந்த ஒன்றுக்கு, மனோமய கற்பனையால் நாம ரூப காட்சிகளை எவ்வாறு கொடுக்க முடியும்?
மனோமய கற்பனையான தூலமாகிய பாத்திரத்தில், வல்வினை தொல்வினை, தொடர்வினை என்ற பவம் எப்படி சூழும்?
யோகமாயாவோ! லோகமாயாவோ!
விஷ்ணுமாயாவோ ! எந்த எந்த மூலமும் இல்லவே இல்லையே? அதன் செய்கை எவ்வாறு தொடரும்?
பரப்பிரம்மம் ஒன்றைத்தவிர, வேறு எதுவும் இல்லவே இல்லை!
அதுவே யாம்! யாமே அது! என அமர்க!
எல்லாம் நீ!