ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 49



பாடல்: 49

எல்லையில்லா வேதமெல்லாம்
சித்த சுத்திக்கு;
ஏதுவாக உபாசனையை
முன்பங்கங்கே;
சொல்லியதால் சித்தத்தின்
சுத்தி பெற்றோர்;
சுகமாக மோட்ச நிலை
சார்வதற்கே;
அல்லலில்லா ஆனந்த
கனமேயான;
அகண்ட பரிபூரணமாம்
பரசிவத்தில்;
கல்லெனவே அசையாமல் கலந்திருக்கும்;
களங்கமில்லா நிஷ்டையினை காட்டிற்றன்றோ!

கருத்து:

நான்கு வேதமும், ஆறு சாஸ்திரமும், பதினெட்டு புராணமும், இரண்டு இதிகாசமும், தெய்வ நிலையை உணர்த்தும் அனைத்து நூல்களும், அனைத்து மந்திரங்களும், ஆகம விதிமுறைகளும் மற்றும் எல்லாமே சித்த சுத்தியின் நிமித்தமே கூறப்பட்டதாகும்.

சித்த சுத்தி பெற்று விட்டால், அத்வைதம் தாமே பிரகாசிக்கும். முதலில் அங்க சுத்தியே (ஒழுக்கக் கட்டுப்பாடே) சித்த சுத்தியை கொடுக்கும்! சித்த சுத்தியே (பலன்
கருதா கர்மாவும் பக்தீயும்) அத்வைத ஞானத்தின் அஸ்திவாரமாகும்!

சித்த சுத்தியின் பலன்  விஷய வாஸனையின் குணதோஷங்கள், மட்டுப்பட்டு குறைந்து, குறைந்து நாசமாகும். குண தோஷங்கள் நாசமானால், நாம ரூப ஜகத் ஜீவ
சொரூபங்கள் பயனற்றுப் போகும். 

மேலே கூறிய நான்கும் பயனற்று இறந்து போறால், குத்துக் கல்லைப் போல் நாம் அது! அது நாம்! என அசைவற்று பிரம்மானந்த சமுத்திரத்தில் கரைந்து விடலாம்!

                        எல்லாம் நீ!


குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 49

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 130