ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 48
weblink
பாடல்: 48
சொல்லும் மலின வாதனையும் மனதின் தர்மம்!
சுத்த பர வாதனையும்
மனதின் தர்மம்!
அலையும் ஒரு வாதனையும் பரத்திற்கில்லை!
ஆதலினால், அம்மயமாய்
நிஷ்டை சார்ந்து;
மலினமென சுத்தமென
மதிக்கப்பட்ட;
மனதுடைய வாதனைகள்
ஒன்றும் இன்றி;
சலனமில்லா சிலை போலும்
காஷ்டம் போலும்;
சற்றேனும் சலியாமல்,
சுகித்திருப்பாய்!
கருத்து:
இப்பாடலில் பரம் என இரண்டு இடத்தை குறிப்பிடுகிறார். அவை
செயலற்ற பரம் ஒன்றாகும்!
செயலுற்ற பரம் என மற்றொன்றை குறிப்பிடுகிறர். செயலுற்ற பரமானது தேவ தெய்வ நிலையாகும். செயலற்ற பரமானது பரசொரூபத்தை குறிப்பதாகும்!
இப்பாடலில் கூறியபடி
மலின வாதனை (அவஸ்தை) என்பது லௌகீக தர்மாதர்மத்தை குறிப்பதாகும். சுத்த பரவாதனை
(அவஸ்தை) என்பது, தெய்வீக ஸத்திய தர்மத்தை குறிப்பதாகும். இவ்விரண்டும், முந்தையது இரும்பு ஊசி ஆகும். பிந்தையது பொன் ஊசி ஆகும். இவ்விரண்மே கர்மாவை பிணைக்கக் கூடிய ஊசிகளாகும்!
கர்மா நிவர்த்தி வேண்டுமென்றால், இவ்விரு தர்மமும் அவஸ்யம் கூடாது. இப்படி அனுபவ ஞானியானவன் இவ்விரு தர்மத்தை விட்ட நிலையில், அது நாம்! நாம் அது! என உணர்வு அடங்கி பட்ட மரம் போலும், குத்துக்கல்லைப் போலும் இருப்பான்.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 48