ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 47
weblink
பாடல்: 47
அனவரதம் அகம்பிரம்ம
நிச்சயத்தை;
ஆதரவோடு அதிதிடமாய் அப்யாசிக்கின்;
மனதிலுள்ள விகல்பமெல்லாம்
முன்பு தீர்ந்து;
மற்றதுதான் விறகற்ற
வன்னியே போல்;
தனது நிஜ அதிஷ்டான
பிரம்மத்தின் கண்;
தான் தானே ஸாந்தியுறும்
ஆதலாலே,
சொனவிதமாய் அகம்பிரம்ம
நிச்சயத்தை
சுகமுறவே முமூட்சுவெல்வாம்
பழகல் வேண்டும்!
கருத்து:
இடைவிடாத தைலதாரை போல், பிரம்மான்ம பாவனையாகிய,
அதுவே நாம்! நாமே அது! நாமே எல்லாம்! என அப்யாசம் செய்ய செய்ய விறகைப் பற்றி எறியும் அக்கினியானது விறகு தீர்ந்தவுடன் எப்படி தானே அணைந்து விடுமோ அதே நிலையில், உன் வினையும் முடியும், உன் மனமும் மஹத்தாகும். நீ ஜீவன் முக்தனாகவே பிரகாசிப்பாய்! ஆகவே, யாம் சொன்ன வண்ணம், அகம்பிரம்ம நிச்சயத்தை தொடர்ந்து செய்வாயாக!
எல்லாம் நீ!