ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 46
weblink
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 46
பாடல்:46
மஹத்தான மாயை என்ன?
அவித்தை என்ன?
மஹத்தான பந்தம் என்ன?
முக்தி என்ன?
மஹத்தான சித்தம் என்ன?
ஜீவன் என்ன?
மஹத்தான ஜகங்கள் என்ன?
ஈசன் என்ன?
மஹத்தான நாமம் என்ன?
ரூபம் என்ன?
மதிக்கின்ற மனதுடைய நினைவனைத்தும்,
மஹத்தான பரப்பிரம்ம
சொரூபமன்றி!
மற்றணுவும் இல்லையெனவே நிச்சயிப்பாய்!
கருத்து:
மாயையோ! அவித்தையோ! பந்தமோ! முக்தியோ! சித்தமோ! ஜீவனோ! ஜகமோ! ஈசனோ! இவைகளின் நாமரூபம் அனைத்தும் மாயா மன கற்பனையாகும்! அவை அனைத்தும் பொய்யே! அந்த நாமே அது! அந்த ஒன்றே ஸத்தியம்!
அதுவே நாம்! நாமே அது!
எல்லாம் நீ!
