ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 45

weblink
பாடல்: 45

நினைவையெல்லாம் நீக்கி
மனோ வாக்குக்கெட்டா
நிஜவடிவாய் நிற்பதுவே;
நிறைந்த முக்தி.
நினைவு அணுவும்
வேறாக நிகழுமாகில்;
நினைவதுவே மஹத்தான
பந்தமாகும்.
நினைவறவே நிற்கின்ற
நிஷ்டை தானே;
நிஜமான அத்வைத
நிலைமையாகும்.
நினைவறவே நிற்கின்ற
நிஷ்டை தானே;
நிரதிசய ஆனந்த
நிலைமையாகும்!

கருத்து:

நாம ரூப, ஜகத் ஜீவ, ஈஸ்வராதிகளின், கற்பனையான, எண்ணங்களை முழுமையாக கெடுத்தலே அத்வைதமாகிய, ஜீவன் முக்தி ஆகும். நாம ரூப, ஜகத் ஜீவ, ஈஸ்வராதிகள் எண்ணம் நிகழுமாகில், அதுவே பந்தம் ஆகும்.

                         எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 45

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113