ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 44

weblink


பாடல்: 44

நற்பிரம்ம விவேக
வலியுள்ள தீரர்
நாரிமுதல் சுகத்திச்சை
பண்ணும் போதும்
பற்பலவாய் தோன்றிய
அந்தசுகத்தை எல்லாம்
பரப்பிரம்ம சொரூபசுகம்
எனவே ஓர்ந்து
கற்பிதமாம் விஷய சுகம்
அனுபவிக்க
கனவிலுமே கருதாது
தைரியத்தோடு
அற்பமில்லா அகண்டபர
சுகமே சேர
அகண்டபர ஞானபலம்
அடைய வேண்டும்!                         

கருத்து:

சம்ஸாரியான குடும்பஸ்தர்கள் பரஸ்திரீ போகம் அவஸ்யம் கூடாது. தன் மனைவியிடம் போகம் அனுபவிக்கும் போதும் அங்கங்களை காம எண்ண கற்பனை பண்ணாமல், இது ஸ்ரீ பகவான் காரியமே என, உணர்வுடன், போதும் ஐயனே போதும், இந்த ஜனன மரண சம்பந்த விபரீத விளையாட்டு என மனமுருகி வேண்டி நடந்தால் வினையும் அதன்
காரியமும், சீக்கிரம் முடிய அவன் கிருபை செய்வான். எண்ண அழுத்தமே பாவம். அக்காரியம் பாபமல்ல.

                           எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 44

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113