ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 43
weblink
பாடல்: 43
தேக முதல் ஒருகாலும்
நாம் அன்றென்றும்;
தெரிவுருவாய் பரப்பிரம்மம்
நாமே என்றும்;
பாகமுற ஒரு பொருளும்
இல்லை என்றும்;
பலபொருளும் பரப்பிரம்மம்
தாமே என்றும்;
ஏகபர பாவனையே
இடைவிடாமல்;
எப்போதும் இனிமையுடன் செய்வாயானால்,
மோஹமெல்லாம் ஒழிந்து
உடனே முக்தனாவாய்!
மொழிந்ததிலோர் ஐயமில்லை; ஸத்தியம் தான்!
கருத்து:-
நாம, ரூப, உடல், உலக பொருள்கள், நாமும் அல்ல! நம்முடையதும்
அல்ல! பிரிந்து பிரிந்து, அறிகின்ற
எந்த பொருளும் நாமரூபத்துடன் இல்லை. அவைகள் அனைத்தும் அதுவாகவே இருக்கிறது. என்ற அகண்ட பரபாவனையை, இடைவிடாமல் செய்தால், அவஸ்யம்
மோஹம் என்ற திரை நாசமாகும். அங்கு நீ அதுவாகவே இருப்பாய்!