ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 42
weblink
பாடல்: 42
எப்போதும் இயம்பாமல் மௌனியாகி;
எவருடனும் கூடாமல்
ஏகாந்தத்தில்;
கற்போல அசையாமல்
கலந்து சற்றும்;
கலங்காத மனதுடனே
ஒருமையாகி;
சற்போத சுககனமாம்
பரம் நாம் என்றே;
சந்ததமும் பாவித்து
சாந்தனாகி;
தற்போத சூனியனாய்
விகல்பம் தீர்ந்து;
தற்பதமே தாமாகி
முத்தனாவாய்!
தற்போதம்: ஆத்ம ஞான விசாரணை!
தற்பதம்: பரமாத்ம நிலை!!
கருத்து:
மௌனம் என்பது பேசாமல் இருப்பதல்ல! அதி அதி அதி சுருக்கமாக பேசுவது! அச்சுருக்கமான வார்த்தையையும், இறை குரு உணர்வுடன் பேசுவது! எவர் மனதையும், புண்படாமல் பேசுவது! வார்த்தையின் பொருள் அறிந்து, நிதானமாக பேசுவது! பேசுவதோ, கேட்பதோ, அதன் பொருளோ, அனைத்தும் அவனே என அடங்கி பேசுவது! இவைகளே, இயல்பான மௌனமாகும்!
சிலகாலம், மனித சஞ்சாரம் இல்லாமல், ஏகாந்தமாக இருந்து பழகலாம் (வீடும், காடும் ஒன்றே) இந்த காலங்களில் நாம் எப்படி இருக்கிறோம்? என்ன ஆவோம் ? என வரும் பயபீதியை தள்ளவும்! குணதோஷம் ஒழிய, எல்லாம் அவனே என விட்டு விடு! குணங்கள், உன்னை பாதிக்கவில்லை என்றால், எல்லாம் ஒன்றே! எல்லாம் அதுவே! என விட்டுவிடு! இப்பயிற்சியினால் தற்போதம் கெடும்! தற்பதம் மேலோங்கும்! நீ அதுவாகவே இருப்பாய்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 42