ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 41
weblink
பாடல்: 41
ஆதலினால் அனைத்திற்கும் அதீதமான;
அகண்ட பரப்பிரம்மம் அகம் என்றெப்போதும்;
சாதகமாம் பாவனையே
செய்ததாலே;
சஞ்சலமாம் விகல்பமெல்லாம்
தவிர்த்து எப்போதும்;
பேதமில்லா பரப்பிரம்ம
ஞானியாகி
பின்னமில்லா பரப்பிரம்ம வடிவேயாவாய்!
ஈதையல்வால் எளிதாக முக்திசேர
வேறொன்றும் உபாயமில்லை.
இதுவே உண்மை!
கருத்து:
ஆகவே எம் குழந்தாய்!
அனைத்துக்கும் ஆதாரமாயும், ஆதரவாயும், உள்ள பரப்பிரம்மத்தைத்
தவிர, அவ்வொன்றைத் தவிர
மற்றொன்றில்லை. இப்படி அனைத்திற்கும் பர பாவனையை செய்து குற்ற உணர்வுகளைத் தள்ளி
பேதமற்ற பரப்பிரம்ம ஞானி ஆகுவாயாக! இதைத் தவிர வேறு எளிய மார்க்கம், எதுவும் இல்லை.
எல்லாம் நீ!