ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 40
weblink
மற்றதுதான் மீளாது
மாண்டு போகும்!
மனதுடைய மீளாத
மாய்வு தானே?
மஹத்தான மோட்ச நிலை!
அதனால் மைந்தா!
மனததனை மீளாது
மாய்க்க வேண்டி;
மஹத்தான பரப்பிரம்ம
நிச்சயத்தை;
மனதொருமையுடன் செய்து
மனதை மாய்த்து;
மஹத்தான முக்தி நிலை
மேவி நிற்பாய்!
கருத்து:
முன் பாடலில் கூறியபடி, அகண்டபர
பாவனையில், மனது நிலைத்து நின்றுவிட்டால், அது மனம் மாண்ட நிலையாகும்.
அதாவது மனம், மஹத்தான நிலையாகும். மனம் மாண்ட நிலையே, ஜீவன் முக்தியாகும்.
ஆகவே, "யத் யாவம் தத் பவதி” என்ற நிலையில், மனதொருமையுடன் பரபாவனை செய்து, மனதை மஹத்தாக்குவாயாக!
அதுவே நாம்! நாமே அது!
என ஆகுக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 40