ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 39
weblink
பாடல்: 39
பலகால வாதனையால்
துவைதம் தானே;
பரமார்த்தம் என்று நினைவு
உதித்த போதும்;
தொலையாத துவைத
வடிவாகத்தானே; (தோற்றும்)
துவைதத்தை நினையாமல்
அவற்றை எல்லாம்;
அலையாத அதிஷ்டான
அறிவாய் நின்ற;
அத்வைதம் ஆன
பரவடிவே யாகச்;
சலியாமல் எப்போதும்
நினைத்து அதனால்;
ஸத்திய ஸித் சுகவடிவாய் முத்தனாவாய்!
கருந்து:
பலகால பழக்க ( வார்த்தையின் விபரீதம்), வழக்க ( செய்கையில் குற்றம், குறை, பேதம், விருப்பு, வெறுப்பு) தோஷங்களால் பழகிய இந்த மனமானது, அத்வைத உணர்வு பெற முடியாமல், துவைத உணர்ச்சிக்கு அடிமையாகவே இருக்கும்!
ஆகவே தளர்வு, அயர்வு,
சோர்வு, இல்லாமல், "நாம் அதுவே! அதுவே நாம்!" என அகண்டபர பாவனையை, இடைவிடாமல் செய்தால், அவஸ்யம் ஜீவன் முக்தனாவாய்!
எல்லாம் நீ!