ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 38
weblink
பாடல்: 38
சலனமில்லா சிலை போலும்
காஷ்டம் போலும்;
சங்கல்ப விகல்பங்கள்
ஒன்றும் இன்றி;
கலனமுறாப் பிரம்மத்தில்
பாலும் நீரும்;
கலப்பது போல் வேறறவே
கலந்து சற்றும்;
அலைவறவவே வெறிதாக சுகித்திருக்கும்;
அறிஞனுடைய அந்நிஷ்டை
மஹிமை தன்னை;
நிலைமருவா மனத்தாலும், வசனத்தாலும்;
நினைத்திடவும் பகர்ந்திடவும்
யார்தான் வல்வோர்?
கருத்து:
ஓர் திட ஞானி, குத்துக்கல்லைப் போலும், பட்டமரம் போலும், உடல் உலக உணர்ச்சிகள் அற்று இறை பர உணர்வோடும் திரிவான்!
கண் இருந்தும் குருடாய், (அறிவுக்கண் உண்டு)
காது இருந்தும் செவிடாய்,
(பர ஒலியை உணர்வான்)
வாய் இருந்தும் ஊமையாய், (பக்குவம் அறிந்து ஸத்திய
வாசகம் வரும்)
பழக்க வழக்கங்களில் ஓர் விபரம் அறியா சிசுவைப் போலும் இருப்பான்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 38