ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 37
பாடல்: 37
பேசிய இந்த நிச்சயமும்,
சமாதி விட்டு;
பிரிவுற்ற காலத்தில்
உள்ளதன்றி;
பாசமில்லா சமாதிதனில்
இருக்கும் காலை;
பரவிய இந்த நிச்சயமும்
அறிஞர்க்கில்லை!
சாசுவத சமாதிதனில்
சலனமற்று;
சங்கல்ப விகல்பங்கள்
அனைத்தும் அற்று;
ஆசில் பரம ஆனந்த
அனுபவத்தோடு;
ஆவரணமின்றி அசஞ்சலமாய்
நிற்பன்!
கருத்து:
மேலே கூறிய திட ஞானிக்கு, எந்த நிஷ்டா சாதனங்களும் இருப்பதில்லை. அவன் நின்றாலும், இருந்தாலும், நடந்தாலும், உண்டாலும், உறங்கினாலும், உடல், உலக, கருவி கரணங்கள் செல்கின்றன, என உணர்ச்சி அற்றிருப்பான். இதை மேலும் சொல்வதென்றால் "செத்தாரைப் போல் திரிவான் சகஜ ஞானி"!
எல்லாம் நீ!