ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 36
Weblink
பாடல்: 36
அன்னியமே தோன்றாத
அகண்டாகார;
அறிவுதனை அடைந்தவனே, முத்தனாவான்!
இந்த விதம் அகண்டபர
ஞானமுற்றோன்;
இவ்வுலகில் எவ்விடத்தும்
அரியவனாவான்!
(அவன்) சொல்ல வொண்ணா
பலகோடி ஜீவருக்குள்;
உரமான ஞானமுள்ளோன்
ஒருவன் தானே!
அன்னவனைத் தரிசித்த
மாத்திரத்தில்;
அறம் மேலாய், அஹம்
எல்லாம் அழியுமன்றே!
கருத்து:
அன்னியமே தோன்றாத, அகண்டாகார அறிவுதனை அடைந்தவனே, ஜீவன் முக்தன்!
A. லௌகீக நிலையில், நாம ரூப, ஜகத் ஜீவ சொரூபங்களாக, குணதோஷ அன்னியம், எண்ணிலடங்கா கோடானு கோடி உண்டு!
B. தெய்வீக நிலையில் மனோமய கற்பனா சூட்சும சொரூபங்கள், தெய்வ வடிவங்கள், ஏககுண வடிவில், அனேகம் உண்டு. இவைகளும் நமக்கு அன்னியமாகவே தோற்றுகிறது.
C. மேலும் அண்டரண்ட கோள்களும் ஜட கட படாதிகளாகவும், நமக்கு அன்னியமாய் தோற்றுகிறது.
மேலே கூறிய, மூன்று நிலைகளுமே நமக்கு அன்னியமே! குறிப்பாக உணர வேண்டியது யாதெனில், நமக்கு அன்னியமாக ஒன்று இருந்தாலும், எண்ணங்கள் விருத்தியாகும்.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 36