ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 35
பாடல்: 35
மாயை இல்லை!
மருவும் அஹங்காரம் இல்லை!
மனதும் இல்லை! புத்தி இல்லை!
சித்தம் இல்லை!
காயம் இல்லை! கருமம் இல்லை! கர்த்தா இல்லை!
காண்கின்ற பொறிகள் இல்லை! புலன்கள் இல்லை!
ஆயபல உயிர்கள் இல்லை!
அமரர் இல்லை!
ஹயனும் இல்லை! ஹரியும் இல்லை! ஹரனும் இல்லை!
நேய பொருள் எவையும் இல்லை! எல்லாம் என்றும்;
ஏகபரி பூரணமாம் பிரம்ம ரூபம்!
கருத்து:
இதில் கூறும் நாம, ரூப, சூட்சும, இயக்க சொரூபங்கள் அனைத்தும், நாம ரூப, குண, சொரூபமாக இல்லை. இவைகளுக்கு அதீதமான ஆதரவாயும், ஆதாரமாயும், இருக்கும் பிரம்மமாக இருக்கிறது. அதுவே நாம்! நாமே அது!
இது ஸத்தியம்!
எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 35