ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 34
பாடல்: 34
நிறைவுரும் இந்நிஷ்டை
உள்ளோர் நீசரேனும்,
நிர்மலமாம் பரமாகி முக்தராவர்.
அறைவதிலோர் அணுவேனும்
ஐயமில்லை
உறுதியிதே, ஆதலினால் முமூட்சுவெல்லாம்,
குறைவறவே இந்நிஷ்டை கூடுமட்டும்.
கூறுபடும் பேதமெல்லாம்
பிரம்ம மென்றும்.
அறிவுருவாம் அப்பிரம்மம்
நாமே என்றும்.
அகண்டபர பாவனையே
பழகல் வேண்டும்!
கருத்து:
இதில் கூறும், பிரம்மான்ம பாவனை செய். பஞ்ச மாபாபங்கள் செய்திருப்பாராயினும், சந்தேகம், கவலை, பயம் வேண்டாம். அவர் அவஸ்யம், ஜீவன் முக்தி பெறுவர். இது ஸத்தியம். அவர் செய்ய வேண்டியதெல்லாம் இந்த ஒன்றே: எல்லாம் ஒன்றே! அது பிரம்மமே!
அது யாமே! யாமே அது! இதுவே ஜீவன் முக்தி!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 34