ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 33
weblink
பாடல்: 33
நிரந்தரமாய் பாவனையில்
மனது நின்றால்,
நிச்சலமாய் அகண்டபர
ஞானம் உண்டாம்,
திரிந்தலையும் மனதினுடைய விகல்பமாக,
தெரிகின்ற பேதமெல்லாம்
உடனே தீரும்!
தெரிந்திடும் இப்பேதமெல்லாம்
தீரும் மட்டும்,
திருசியமாய் தெரிவதெல்லாம்
பரமே என்றும்,
பொருந்திய அப்பரப்பிரம்மம்
நாமே என்றும்,
பூரணமாய் எப்போதும்
தியானம் செய்வாய்!
கருத்து:
முன் பாடலில் சொன்னபடி இடைவிடாமல், பரபாவனை செய்வாயானால், குற்றம் குறை! பேத பாவனை! விருப்பு வெறுப்பு! எல்லாம் அணு அணுவாக, குறைந்து குறைந்து, நாசமாகும். இந்நிலை பெறும் வரை,
கண்ணால் காணும் நாம ரூப ஜகத் ஜீவ தோற்றம் அனைத்தும் அதுவே என்றும், அதுவே நாம்! நாமே அது! என்ற அகண்டான்ம பரபாவனையை செய்வாயாக!
எல்லாம் நீ!