ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 32
weblink
பாடல்: 32
அலைமனதின் ஓர்மையில்லாத் தன்மையாலே;
அகம்பிரம்ம பாவனையே
செய்யச்சக்தி;
இலதேனும், எப்போதும் சிரத்தையோடு;
யாம் பிரம்மம்; யாம் பிரம்மம்;
யாமே எல்லாம்;
சலனமில்லா பரமே நாம்;
பரம் நாம் என்றே,
(இந்த) சப்தத்தை, உரைத்தாலும் இவ்வறத்தால்;
நிலைமருவாது, அலைமனது மெள்ள மெள்ள;
நிச்சலமாய் நிகழ்த்திய
பாவனையில் நிற்கும்.
கருத்து:
சர்வசதாவும் சலித்து, சஞ்சலம்
அடைகின்ற, மனமானது அகண்டான்ம பாவனையை, செய்ய திறமில்லாது போனாலும், "யாம் பிரம்மம்! யாம் பிரம்மம்! யாமே எல்லாம்!" என்ற மஹாவாக்கியத்தை சதாவும் உரக்கச் சொன்னால், இந்த தர்மத்தால் நிலையில்லாத மனம், அணு அணுவாக, பிரம்மான்ம பாவனையில், நிலை பெற்று நின்றுவிடும்.
எல்லாம் நீ!