ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 31
Weblink
பாடல்: 31
ஜகமுதலாய் எண்ணுவதை
தூரத் தள்ளி;
சகலமுமே பிரம்மமென
தியானம் செய்வாய்!
அக உடல் என்றெண்ணுவதை
தூரத் தள்ளி;
அகம் பிரம்மம் என்றனிசம்
தியானம் செய்வாய்!
சகலமுமே பிரம்மமென்றும்;
அது நாம் என்றும்;
சந்ததமும் சலியாது
தியானம் செய்தால்;
அகம் அன்னியம் ஜகமுதலியது அன்னியம் என்னும்;
அயலெல்லாம் அனுதினமும்
அடைவாய் தீரும்!
கருத்து:-
நாம ரூப ஜகத், கட படாதிகளாக காண வேண்டாம். பிரம்மமே அப்படி தன்னைத்தானே தோற்றுவித்துக் கொள்கிறதென உணர். நாம ரூப, அனைத்து ஜீவ சரீரங்கள் என காணாதே! பிரம்மமே தன்னைத் தானே, அப்படி தோற்றுவித்துக் கொண்டு, விளையாடிக் கொண்டிருக்கிறதென உணர்! நாம் அன்னியம்; ஜகம் அன்னியம்; ஜீவ
கோடிகள் அன்னியம்; ஜட கட படாதிகள் அன்னியம், என்ற இப்பேத உணர்வுகளை, கெடுத்து நாசம் செய்து நாம ரூப, ஜகத் ஜீவ, ஜட கட படாதிகள் அனைத்தும் அந்த ஒன்றுக்கு அன்னியமில்லை, நாமும் அதற்கு அன்னியமில்லையென தியானம் செய்வாய்!
ஜட, கட, படாதிகள்: மண், மலை, ஜலம், அனைத்து ஜீவ சரீரங்கள், மரம், செடி, கொடி, புல், பூண்டு ஆகும்.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 31