ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 30

weblink


பாடல்: 30

கறையற்ற பரப்பிரம்மம்
ஒன்றே உண்மை!
(நீ) காண்பதும் கேட்பதும்
எவையும் இல்லை!
நிறைவுற்ற பரப்பிரம்மம்
ஒன்றே உண்மை!
(நீ) நினைப்பதும் நினையாதும்
எவையும் இல்லை!
மறைவற்ற பரப்பிரம்மம்
ஒன்றே உண்மை!
மற்றதெல்லாம் ஒருகாலும்
இலவே இல்லை!
குறைவற்ற பரப்பிரம்மம்
நாமே என்று,
கோதறவே எப்போதும்
தியானம் செய்வாய்!

கருத்து:-

கங்குகறை இல்லாத அதாவது எல்லையில்லாததும், பரிபூரண நிறைவானதும், எத்திரை மறைப்பும் இல்லாததும், கூடுதல் குறைதல் இல்லாததும்; உள்ள காலாதீத பரம்
ஒன்றே ஸத்தியமாய் உள்ளது. கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும், வாயால் விளக்கம் கொடுப்பதும், சுட்டிக்காட்டவோ, தொட்டு உணர்த்தவோ, இயலாததான பரம் ஒன்றே உள்ளது! மற்றும் நாமரூப ஜகத்ஜீவ கற்பனை சொரூபங்கள் இல்லவே இல்லை. அதுவே நாம்! நாமே அது! என தியானம் செய்வாயாக!

                          எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 30

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113