ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 27
பாடல்: 27
கடபடமே முதலியவும்
மித்தையே போல்
நனவினிடை
திருசியமாய் நாடப்பட்ட
நாநாவாம் ஜகஜீவ
பரமும் மித்தை
அனையதெல்லாம்
அறிகின்ற திருக்கேயான
ஆன்மாவுக்கு அபின்னமதாம்
பிரம்மம் ஒன்றே
அனவரதம் அழியாத
உண்மை வஸ்து
அறைந்ததிலோர்
அணுவேனும் ஐயமில்லை!
கருத்து:
கனவில் நாமரூபம் அனைத்தும், எம்மை தேடி வருகின்றன. நனவில் நாமரூப பொருளை கர்மா
சம்பந்ததினால், தேடி அடைகிறோம். ஆனால், அனைத்து நாமரூப,
ஜகம், ஜீவர்கள், அனைத்தும் மித்தையாக வந்து இருந்து எம்
முள்ளேயே, மறைந்து விடுகின்றன. அந்த நாமரூப மனைத்தும்
பொய்யே! அவை வந்து, இருந்து, விளையாடி மறைந்த
அதிஷ்டானமான யாம் மெய்யே!
என் அதுவே நாம், நாமே அது! என மூழ்கி கரைந்து விடுவாயாக.
அதாவது காணும் காட்சிகள் அனைத்தும் பொய்!
அவைகளை காண்கின்ற யாம் மெய் ஆகும். எமக்கு அன்னியமாய் எவையுமில்லை என்ற திட உணர்வோடு இருப்பாயாக.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 27