ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 26
weblink
தனது மன முயற்சியினால் பிரம்மாப்யாசம்
தவிராது செய்து மனோஜயம் பெற்றோர்க்கே
அனையபர உணர்வு எளிதாய் உதிக்குமன்றி
அன்னியருக்கு எளிதாக உதியாதென்றும்
சொன்ன உணர்வு சுகம் நல்கும் துயரைத் தீர்க்கும்
சுபத்திற்கும் சுபமாக்கும்
சுலபமாகும்
ஜனனமுதல் விகாரமெல்லாம்
தவிர்த்து தன்னை
ஸத்தியஸித் சுககனமாம் பரமேயாக்கும்!
கருத்து:
நாம ரூப, ஜகத் ஜீவ தோற்றங்களிடையே நான், என்னால் என்ற கர்த்ருத்வத்தை ஏற்காமல், இறையோ, பரமோ, அதனிடம் நம் கண், காது, வாய், இவைகளை மூடிக்கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எல்லாம் நீயே! என, நிர்மூலமாக விடுவதே தனது மன முயற்சியாகும்.
கர்த்ருத்வத்தை நாம் ஏற்கும் போது நாம் ஜீவனாகவே தான் இருக்க முடியும், இருக்க வேண்டும். நாம் ஆத்மாவாக ஆக முடியாது, இதுவே பிரமாண உன்மையாகும். கர்த்ருத்வத்தை நாம் வைத்துக் கொண்டு, நாம் கல்பகோடி காலம் நான் ஆத்மா! நான் பரமே! என ஜபதபத்தை பண்ணினாலும், சொன்னதை சொல்லும், கிளியைப் போலத்தான் இருக்க முடியும். இது ஸத்தியப் பிரமாண உண்மை.
மேலே சொன்ன நிலையில், தனது மனோ முயற்சியை செய்து பிரம்மான்ம பாவனையாகிய, அதுவே நாம்! நாமே அது! என செய்யும்போது, அதுவாகவே இருப்பாய்.இதுவே சுபத்திற்கும் சுபமாக்கும் வழியாகும். அதிசுலபமான வழியுமாகும்.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 26