ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 25
weblink
பாடல்: 25
அனக அறிவான
பரப்பிரம்மம் தானே,
அவித்தையினால் அசைவுறுமேல் மனதாய் தோன்றும்.
வினவும் அறிவான
பரப்பிரம்மம் தானே,
வித்தையினால் அசைவறுமேல் பரமேயாகும்.
மனததுவும் சலனமுடன்
இருக்குமாகில்,
மஹத்தான ஜீவபர
ஜகமாய் தோற்றும்.
மனத்துவே சலனமில்லா
திருக்கு மாகில்
மாசற்ற அறிவான
பரமேயாகும்!
கருத்து:
சுத்தத் தெளிவான, பரப்பிரம்மமானது,
அஞ்ஞானத்தால் (கவனக் குறை
வால்) மனம், புத்தி, சித்தத்தின்
தடுமாற்றத்தால், நாம ரூப ஜகத் ஜீவ, சொரூபமாகத் தோற்றும். அதே மனமானது, அசைவற்ற, "அதுவே நாம்" என சும்மா இருக்குமாகில், குற்றமற்ற பரமாகவே தோற்றும்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 25