ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 23
weblink
பாடல்: 23
மனோஜயமே திடமாக
கிட்டு மட்டும்
மற்றுள்ள வியாபாரம்
அனைத்தும் விட்டு
வினோதமதாய் யாவும் ஸித்
அதுநாம் என்றே
விருப்பமுடன் விடாதுமிக
சிந்தை செய்தால்
மனோஜயமாய் மஹத்தான
அறிவு உதிக்கும்
மற்றதனால் ஜகம் முதலாம்
இருள் இறக்கும்
இனோதயமே ஆகியிடின்
இருள் எங்கேனும்
இருப்பதனை யாரேனும் கண்டதுண்டோ?
கருத்து:-
மனம் மஹத்தாகும் வரை, அதாவது நாமரூப குண தோஷங்கள் மறையும் வரை, எல்லாம் ஒன்றே! அது நலமே! அது யாமே! யாமே அது என்ற பிரம்மான்ம பாவனையை செய்து வந்தால், அவஸ்யம் ஞான சூரியன் உதிப்பான். அவஸ்யம் அஞ்ஞான இருள் நாசமாகும். இது பிரமாண உண்மையாகும்.
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 23