ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 22
Weblink
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 22
பாடல்: 22
மனதென்றும் வாக்கென்றும்
மற்றதென்றும்;
மருவிய இப்பேதமுமே எமக்கிங்கில்லை.
கனவிலுறும் பொருள்களில் எப்பொருள்களேனும்;
காண்கின்ற தமக்கயலாய் கண்டதுண்டோ?
நனவிலுறும் பொருள்களும் அவ்விதமேயாக;
நாடியிடும் ஞானவடிவு
ஆன நாமே;
எனும் உரமாம் பாவனையால்
மனதை வென்று;
ஏகபர வடிவாகி
சாந்தனாவாய்!
கருத்து:-
எண்ணம், சொல், செயல் என்ற பிரிவினையான எந்த பேதமுமே எமக்கு இல்லவே இல்லை! கனவில் அனைத்து பொருள்களும் எம்மை தேடி வருகின்றன. நனவில் காணும் அனைத்து பொருள்களும் எமக்கு அயலாக என்றுமே இல்லை. ஆழ்ந்த உறக்கத்தில், எல்லாமுமே எம்முள்ளேயே அடங்கி, ஒடுங்கி மயமாகி விடுகின்றன. ஆகவே எமக்கு அயலாக, எதுவும் எப்போதும் இல்லவே இல்லை என்ற உறுதியான பாவனையால் மனதை வென்று எப்போதும் சாந்தனாவாய்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 22