ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 21
weblink
பாடல்: 21
மனததுதான் அவிசார
தசையில் மைந்தா,
மயக்கமுறும் ஜகமுதலாய் தோற்றினாலும்;
மனதுருவை மாறாது
விசாரம் செய்தால்;
மற்றதுதான் மஹத்தான
ஸித்தேயாகும்!
மனததனை எளிதாக
ஜெயித்து எப்போதும்;
மஹத்தான ஸித்துருவே
ஆக வேண்டி;
மனது முதல் எல்லாம் ஸித்;
அது நாம் என்றே;
மாறாது சிந்தித்து சாந்தனவாய்!
அவிசாரம் எனச் சொல்லும், கவனக்
குறைவினால், நாம ரூப ஜகமாய்த் தோற்றும்! அதில் தோன்றும் நாமரூபம் பொய். நாமரூபத்திற்கு ஆதாரமான, அந்த ஒன்றே மெய்! என தைலதாரை போல் மாறாமல் விசாரம் செய்தால், அதாவது மனம், புத்தி, சித்தம் ஆகிய அனைத்தும் ஸித் சொரூபமே என, சிந்தை செய்து, அதுவே நாம்! நாமே அது! என சிந்தித்து சாந்தனாவாய்!
எல்லாம் நீ!