ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 20
weblink
பாடல்: 20
மனந்தனினால் செய்ததுவே செய்ததாகும்.
மற்றொன்றால் செய்ததெல்லாம் செய்ததாகா.
தினம் தினம் திடமான
மனதினாலே;
திருசியமாய் காண்பதெல்லாம் திருக்கேயான;
அனந்தபரப் பிரம்மமென்றும்
அதுநாம் என்றும்;
அகண்டபர பாவனையே செய்வாயானால்;
கனந்தரும் அப்பாவனையால்
மனதை வென்று
கலங்காமல் எப்போதும்
சாந்தனாவாய்!
கருத்து:
எண்ணமே, புண்ணிய பாப வினை என்னும் கர்மாவாகும். தூலம் அவ்வினையை செய்யும் ஓர் கருவியாகும். ஆகவே, அந்த மன எண்ணத்தால், திடமான உறுதியினால்! கண்ணால் காணும், அனைத்து நாமரூப, ஜக ஜீவர்களும், அந்த ஒன்றே! அதுநாமே! என்ற அகண்ட பரபாவனை செய்வாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 20