ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 16
weblink
பாடல்: 16
அன்னியமாய் காண்பதெல்லாம்
பிரம்ம மாத்ரம்;
ஆதலினால் உளது பரப்பிரம்மம் ஒன்றே!
இந்த விதம் இருந்திடினும்;
உனக்கிப் இப்போதிங்கு!
இயம்பியிடும், குரு சீடன் உலகமாதி!
பின்னமெனத் தோற்றியிடும் இப்பேதமெல்லாம்!
பிரம்மமென்றும் அப்பிரம்மம்
நாமே என்றும்!
உற்ற திட பாவனையால்,
மனதை வென்று!
மஹத்தான பிரம்மமதாய்
சாந்தனவாய்!
கருத்து:
நமக்கு அன்னியம் எதுவுமே இல்லை; இது ஸத்தியப் பிரமாண உண்மை ஆகும். ஆனால் உன் பார்வையில் சொல்லும் யாம்! கேட்கும் நீ! மற்றும் நாம ரூப ஜகத் ஜீவ தோற்றங்கள்! அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து பின்னலாக தோற்றும் இவை அனைத்தையும், விபரீத விகாரமாக நோக்காமல் எல்லாம் மண்ணே (பரமே) மண்ணுக்கு அன்னியமில்லை. அதாவது பரத்துக்கு அன்னியமில்லை, நாமும் அதுக்கு அன்னியமில்லை. அதுவே நாம்; நாமே அது! என மனதை வெல்வாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 16