ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 19
weblink
எவையுமில்லை.
திருசியமாய் தெரிகின்ற
ஜகமும் இல்லை.
அஹங்காரம் முதலியதோர் அணுவுமில்லை.
அகிலமுமே அகண்டபரப்
பிரம்மமேயாம்!
நீங்காமல் எங்கும் ஓர்
நிறைவாய் நின்ற;
நிமல அறிவு ஆன
பரம் நாமே என்று;
தூங்காது தூங்கும் நிலை
கிட்டும் மட்டும்;
தொடர்பாக சிந்தித்து
சாந்தனவாய்!
கருத்து:
தீங்காகிய துன்பம் தரக் கூடிய, மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் எவையும் இல்லை. அவை உன் மனோமய பிராந்தியே! ஊசிநாட்ட இடம் இல்லாமல், அந்த பரமே, நிறைந்திருக்கிறது. அதுவே இவை அனைத்துமாயிருந்து, விளையாடுகிறது. அவைகளாய் அது இல்லவே இல்லை, அதுவே நாம்! நாமே அது! என பூர்ணமாக இருந்து வஞ்சமனதை வெல்வாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 19