ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 18
weblink
பாடல்: 18
அறைந்த பொருள் அனைத்தையுமே வாக்கு மாத்திரம்,
ஆக்காமல் ஆதரவாய் மனதில் கொண்டு,
செறிந்த மனது ஒருமையுடன்
எல்லாம் என்றும்,
ஸின்மயமாம் பரப்பிரம்மம்
அதுநாம் என்றே;
நிறைந்த பரபாவனையால்
மனதை வென்று,
நிச்சலனாய் எப்போதும் சாந்தனாவாய்!
அறைந்ததெல்லாம் சத்தியமே
ஐயம் இல்லை,
அகண்டபர சிவம் பரம் ஆணை
ஐயம் இல்லை!
கருத்து:-
யாம் சொல்லும் அத்வைத கருத்துக்களை, வாய் ஞானமாய் இல்லாமல், அனுபவ ஞானமாக கொண்டு மன ஓர்மையுடனும், ஆதரவுடனும், ஆர்வமுடனும்; அனைத்து நாமரூபமும் அது இல்லை என்றும், அதுக்கு அவைகள் அன்னியம் இல்லை எனவும், நாமும் அதற்கு அன்னியம் இல்லை என்றும், "அதுவே நாம்; நாமே அது" என உன் சஞ்சல மனதை நாசம் செய்வாயாக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 18
