ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 15
weblink
மித்தை யென்னும் சித்தமுமே
என்றும் இல்லை!
மிகப் பொய்யாம் ஜகமுதலும்
என்றும் இல்லை!
மித்தை யென்னும் வார்த்தையுமே என்றும் இல்லை!
மிகமிகவும் மூடரென்னும்
ஜனமும் இல்லை!
ஸத்திய ஸித் சுகபரமே
எல்லாம் என்றும்,
சந்ததமும் அப்பிரம்மம்
நாமே என்றும்,
இத்திறமே திடமான
முயற்சியோடு,
எப்போதும் சிந்தித்து
சாந்தனாவாய்!
கருத்து:
மித்தை என்றும், பொய் என்றும், பொருளும் இல்லை. மித்தை என்ற வார்த்தையும் இல்லை. பாப ஜன்மா! மூட ஜன்மா! பாமரன்! என்ற தாழ்வான, எந்த ஜன்மமும் இல்லவே இல்லை!
அனைத்தும் அந்த ஒன்றே!
அந்த ஒன்றே நாம்!
நாமே அது!
என, அனுபவத்தோடு மனதை வெல்வாய்!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 15