ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 14


பாடல்: 14

நரர் சுரராய் திரியக்காய்
நகவனாதி;
நாநாவாய் நாடியிடும்
நாட்டமெல்லாம்;
தெரிவுருவாய் நிகழ்கின்ற
தேவதேவன்;
திருவுருவே என்று திடத்
தியானம் செய்து;
இருகுணமும் இழந்து அமல
ஸத்வம் மேலாய்;
இருக்கின்ற சூட்சும மனோ
விருத்தி கொண்டே;
பரமசிவம் பரிபூரண
சொரூபம் தன்னை;
பார்த்திடலாம் மற்றொன்றால்
பார்க்க வொண்ணா.

கருத்து:-

மனித இனத்தையும் சேர்த்து நடப்பன! பறப்பன! ஊர்வன! நீந்துவன ஆகிய அனைத்து ஜீவகோடிகளிலும், அந்த பரமாகிய, ஸ்ரீபகவானே நிறைந்திருக்கிறான் என்ற பேதமற்ற உணர்வை பெற்றவனே, ஸ்ரீ பகவத் சொரூபத்தை நேருக்கு நேர் தரிசித்தவனாகும், தரிசிக்க முடியும்.

                           எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 14

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113