ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 13
weblink
பாடல் - 13
சித்தமென ஒருபொருள்
இங்கு உள்ளதென்று;
சிறிதேனும் சிந்தித்தால்
உடனே ஸித்தே!
சித்தமதாய் தோன்றியிடும்
அதுவே ஜீவ;
ஜகபரமாய் தோன்றுவதால்
துன்பம் உண்டாம்!
புத்திரனே! ஆதலினால்
சித்தம் என்றோர்;
பொருளொன்றும் இல்லை
எல்லாம் ஸித்தேயென்றும்!
இத்திறமாம் உறுதியினால்
சித்தம் தன்னை
எளிதாக ஜெயித்தென்றும்
இன்பம் சார்வாய்!
நாமரூப பொருள்களை, சிந்தித்து எனது என அபிமானம் பாராட்டி, அனுபவிப்பது "ஸித் சொரூபமாகிய சித்தமேயாகும்". ஸித் அசையாமல் இருந்தால், அதுவே "ஸத்தாகிய ஆன்மாவாகும்". ஸித் அசைந்தால், அதுவே ஜகத் ஜீவ சொரூபமாகி துன்பத்தை கொடுக்கும்; சித்தமாக மாறிவிடுகிறது.
ஆகவே, எல்லாம் அந்த ஒன்றே என்றும்! அதுவே ஸித்தாகிய ஆன்மா என்றும்! ஆன்மாவே நாம் என்றும்! நாமே ஆன்மா என்றும்! துன்பத்தை நீக்குக!
எல்லாம் நீ!
குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 13