ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 12

www.anbinkudil.online

பாடல்: 12

எள்ளளவும் அயலின்றி
எல்லாம் என்றும்;
ஏக பரப்பிரம்மமதாய்
இருந்த போதும்;
கள்ளமுறும் மனதுடையோர் பரசிவத்தின்;
கருணையில்லா குற்றத்தால்
வேறுவேறாய்;
உள்ளமதில் உணர்ந்து மகாபவதுக்கத்தை;
உறுவதனால், முமூட்சுவெல்லாம் எவ்விதத்தும்;
தள்ளவொண்ணா பரமசிவம்
கருணை பெற்றே;
தமது பவ துக்கத்தை
தவிர்க்க வேண்டும்!

ஊசி நாட்ட இடம் இல்லாமல், எங்கும் ஏகமாய், பிரம்மம் நிறைந்து இருந்தாலும்; ஸ்ரீபகவான்
கருணை, பெறாத மூடர்களுக்கு பிரம்மம் தோற்றாது. ஜக,  நாம, ரூபம்தான் தோற்றும். (அத்வைதம் உணரமுடியாது, துவைதம்தான் தோற்றும்). ஆகவே, சாதனையாளர் அனைவரும், ஸ்ரீ பகவான் கருணை பெற வேண்டும்.

                       எல்லாம் நீ!

குறிப்பு: ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 11

Popular posts from this blog

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 129

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - தெளிநிலை | பாடல் - 87

ஸ்ரீ ஸ்வய ஞானானுபவம் - நிதாகன் அனுபவம் | பாடல் - 113